சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தகாலம் கடந்த 2019-ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் இன்னமும் அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத்தொடர்ந்து, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel