Skip to content
  • Wed. Sep 2nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
TN ASSEMBLY ELECTION 2021 தமிழ் நாடு

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவன பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் சந்திப்பு…  வைரல் வீடியோ…

Apr 8, 2021

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்  ஐபாக் நிறுவனத்துக்கு சென்று பிரசாந்த் கிஷோருடன் திமுக தலைவர்  ஸ்டாலின் சந்தித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வியூகங்களை அமைக்க , தேர்தல் சாணக்கியர் என கூறப்படும் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியது. இதையடுத்து, அந்நிறுவனத்துடன் பலகோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நிறுவனத்தின் ஆலோசனையுடன், கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை கமிறக்கி, தேர்தலில் களமிறங்கியது.

இந்தநிலையில், கடந்த 6ந்தேதி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு குறித்து அறிந்துகொள்ள  பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  களநிலவரம் தொடர்பாக 2 முறை விசிட் செய்து,  ஆய்வு செய்தார்.  அங்கு வாக்குப் பதிவு நிலவரம், ஒவ்வொரு மாவட்டம், மாவட்டங்களில் தொகுதிகளில் வாக்குப் பதிவு நிலவரம் ஆகியவை தொடர்பாக விவாதித்தார். ஒவ்வொரு தொகுதி வாக்குப் பதிவு சதவீதமும் எந்த அளவுக்கு திமுக வேட்பாளருக்கு சாதகம் – பாதகம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மீண்டும் ஐபேக் நிறுவனம் சென்ற திமுக தலைவருக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஐபேக் நிறுவன ஊழியர்கள், ஸ்டாலினை  கைதட்டி வரவேற்றனர்.  பின்னர், பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது, பிரசாந்த் கிஷோர்ல தரப்பில் திமுகவுக்கு 180 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என தெரிவித்ததாக கூசுறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, ஸ்டாலினுடன் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் ஐபேக் அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.patrikai.com/wp-content/uploads/2021/04/Stalin-IPac.mp4

 

Post navigation

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை! சென்னை உயர்நீதிமன்றம்
அதிகாரப்பூர்வமாக வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது! மு.க.ஸ்டாலின்

Related Post

தமிழ் நாடு

போட்டி அதிகரிப்பால் டெண்டர்களில் 30% வரை அரசுக்கு சேமிப்பு

இந்தியா தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

₹1,034 கோடிக்கு TBZ நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்குவதன் மூலம் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அகில இந்திய அளவில் ஜொலிக்கத் தயாராகிறது

இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

உலகம்

உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar
உலகம் மருத்துவம்

மலேரியா காய்ச்சல் : விமான நிலைய ஊழியர் 2 பேர் பலி… விமானத்தில் வந்த கொசு காரணமா ? ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகம்…

August 26, 2026 Sundar
இந்தியா உலகம்

சீனா–நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: காரணம் என்ன? – பிரதீப் ஜான் விளக்கம்

August 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer