சித்தூர்,
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஒருவர்.
இந்த அதிரடியான அறிவிப்பு சென்னையை ஒட்டி உள்ள ஆந்திர மாநில பார்டரில் உள்ள சித்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சித்தூர் கலெக்டர் இந்த அதிரடி சேவையை நிறுவி, அரசு அதிகாரி களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளார்.
லஞ்சம் தவிர்த்து, நெஞ்சை நிமிர்த்து என்று தமிழகத்தை சேர்ந்த ஆட்சியர் சகாயர் கூறுவதுபோல, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலும், வாங்கினாலும் அதுகுறித்த புகார்களை உடனே தெரிவிக்க பொதுமக்களின் வசதிக்காக 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி அதகளம் செய்துள்ளார்.
சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா இந்த சேவையை ஏற்படுத்தி உள்ளார். இந்த எண்ணில் புகார் அளிக்கும் மக்கள், அவர்கள் லஞ்சமாக அளித்த தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டு மீண்டும் திருப்பி அளிக்கப்படும் என்றும்,
மேலும், லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு, லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆட்சியரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்திலும் இதுபோல ஒரு சேவை அறிமுகப்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.