சென்னை:
தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி 29 சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட அமலாக்கப் பிரிவு சார்பில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது வரும் 25-ம் தேதிக்குள் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.