புதுடெல்லி:

மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டதாக, உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார்.


புதுடெல்லியில் இந்திய டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மன்மோகன்சிங் ஆட்சி மற்றும் மோடி ஆட்சியை ஒப்பிடும்போது, மோடி ஆட்சியில் சகிப்புத்தன்மை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

கும்பலாக வந்து தாக்குவது, மா
டு  குறித் விழிப்புணர்வு எல்லாம் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டதில்லை.

இவையெல்லாம் இன்று வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. இதுபோன்ற பிரச்சினை மன்மோகன் சிங் ஆட்சியில் வந்ததில்லை.
மோடி ஆட்சியில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய், சகிப்பற்ற தன்மை அதிகமாகிவிட்டது.

2014-ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை என்றார்.