மணிப்பூர்: டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையித்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு மணிப்பூர் மாநில அரசு கூடுதல் எஸ்.பி.பொறுப்பு வழங்கியதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவித்து உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் . 49 கிலோ எடை பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூங்கும் வீராங்கனை மீரா பாய் சானு பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்து பதக்கப்பட்டியலில் இடம்பிடித்தார். இதையடுத்துஅவர் இன்று இந்தியா திரும்பினார்.  வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.  பாரத் மாதா கி ஜெய் கோஷங்களும், ஜெய்ஹிந்த் கோஷங்களும் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.  விமான நிலையில், அவருக்கு ஆர்.டி.-பிசிஆர் கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும்  பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்த மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மகத்தான சாதனை புரிந்ததற்காக அவருக்கு பரிசுத்தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கூடுதல் எஸ்.பி. பொறுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.