டோக்கியோ: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

6முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், பல முறை ஆசிய சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல வென்றவருமான, 38 வயதான இந்திய குத்துச்சண்டைவீராங்கனை மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக் 51 கிலோ எடைப் பிரிவு குத்துசண்டை போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
இந்த சுற்றில் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாயை எதிர்கொண்ட மேரிகோம், 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel