டோக்கியோ
இந்திய ஆடவர் வில்வித்தை அணி ஒலிம்பிக் போட்டிகளில் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வில்வித்தை ஜோடியினே நேற்று முன் தினம் அடைந்த கலப்பு இரட்டையர் பிரிவில் தென் கொரியாவிடம் தோற்று வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதை சரி செய்வது போல் இந்திய ஆடவர் வில்வித்தை அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிராக இந்திய ஆடவர் அணி வில்வித்தை வீரர்களான பிரவின் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதானுதாஸ் 10 புள்ளிகள் இலக்கை 5 முறை குறி வைத்துத் தாக்கினார்.
அதைப் போல் கஜகஸ்தானின் வீரர்களும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக மூன்றாம் செட்டை அவர்கள் 1 புள்ளி இடைவெளியில் கைப்பற்றினர். இருப்பினும் இந்திய அணி 6:2 என்னும் செட் கணக்கில் வெற்றி பெற்று கஜகஸ்தானை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.
காலிறுதி போட்டியில் தென் கொரிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.