டோக்கியோ: அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கின் ஹாக்கிப் போட்டிகளுக்கான அட்டவணையின்படி, இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி, நெதர்லாந்தையும் சந்திக்கிறது.
இந்திய ஆண்கள் அணி, ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி – நியூசிலாந்து மோதும் முதல் போட்டி ஜூலை 24ம் தேதி நடக்கிறது.
இந்தியப் பெண்கள் அணியும் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்பிரிவில், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.