சென்னை
இன்று முதல் அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தற்போது ரேஷன் க்டைக்ளில் கொரோனா காரணமாகக் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே நாள் ஒன்றுக்கு 225 அட்டைதாரர்களுக்கு மிகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வழங்க இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யபட உள்ளது.
இந்த டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க உள்ளனர்
இந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் மற்ற தேதி அல்லது நேரத்தில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel