பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க சுடுகாட்டில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோரின் உடல் ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாக வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தொற்று தீவிரமடைந்துள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதற்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் காரணம் என்றும், மத்திய மாநில அரசுகளின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் உயிரிப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை எரிக்கும் தகன மேடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வடமாநிலங்களில் அற்றின் கரையோரம் வைத்து ஏராளமான பிணங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் தீவிரமாகி உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகிளல்ர இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை முழுதும் நிரம்பி விட்டது என்றும் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், அவர்களின் உடல்களை தகனம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து பிணங்கள் சுடுகாட்டுக்கு வந்துகொண்டிருப்பதால், பெங்களூரில் உள்ள தகன மேகைளில் கொரோனாவால் பலியானவர்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்து வருவதால், அதற்கு டோக்கன் வழங்கப்பட்டு, சுழற்றி முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களூரு தகனங்களில் அதிகாலை 2 மணி வரை பிணங்கள் எரியூட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 14 தகனங்கள் எரியூட்டப்பபட்டதாகவும், ஆறு சடலங்கள் ஆம்புலன்சில் காத்திருந்தன என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எடியூரப்பா தலைமையிலான மாநில பாஜ அரசின் மெத்தனப்போக்கு காரணமாகவே, கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.