சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பாக அரிசி, சர்க்கை உடன் கரும்பு மட்டுமே அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் செலவுக்கு ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் குறித்த டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த டோக்கனில், பொங்கல் தொகுப்பு வாங்கும் நேரம், காலம், தேதி என அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு உடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய தேதியில் ரேசன் கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பு, ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.