சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், பொதுமக்கள் கூட்டமில்லாமல் ரேசன் பொருட்களை பெற இன்று முதல் 4 நாட்கள் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. 5 ம் தேதி பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமுடக்கம் 6ந்தேதி காலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த ரேசன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ள அரசு, மக்கள் கூட்டம் சேருவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறத.
அதன்படி, தமிழக ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கான டோக்கனை நியாய விலை கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கவுள்ளனர. இன்றுமுதல் 4ந்தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டோக்கனில் குறிபிட்ட நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் வரும் 5ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம் துவரம் பருப்பு மட்டும் சில காரணங்களால் ஜூன் 7 முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.