புதுச்சேரியில் ஒருவர் பாக்கியில்லாமல் “கபாலி” படம் பார்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அம் மாவட்ட கலெக்டர் ஜவஹர்.
“அரசு ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்” என்று ஏற்கெனவே அறிவித்தார். இப்போது, “தங்கள் வீடுகளல் கழிவறை கட்டுவோக்கு கபாலி டிக்கெட் இலவசம்” என்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய இவர், “புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 45,000 வீடுகள் மற்றும் நகரப் பகுதிகளில் 9,000 வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவறை கட்டுவதை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தங்கள் வீடுகளில் கழிவரை கட்டுவோருக்கு கபாலி டிக்கெட் இலவசமாக வழங்கலாம் என்று தோன்றியது. இதை அறிவித்தவுடன் பலரும், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி வருகிறார்கள்” என்கிறார் உற்சாகமாக.
Patrikai.com official YouTube Channel