திருவனந்தபுரம்:
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கள்ளுக்கடைகளை கேரள அரசு மீண்டும் திறந்துள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியது கேரளாதான். இருந்தாலும் மாநில அரசு மற்றும் மக்களின் ஒத்துழைப்பால், அங்கு கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஒருசிலர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், அங்கு பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது. ஏற்கனவே சாராயக்கடைகளை திறக்க மாநில மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில்,  அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக, ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் தடை போட்டுவிட்டது.
இந்த நிலையில், தற்போது கள்ளுக்கடைகளை திறந்துள்ளது.
‘குடி’ மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு மாதங்களாக முடிப்பட்டிருந்த கள்ளுக்கடையை மட்டும் திறக்க அனுமதி பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாநிலத்தில் 3,590 கள்ளுக் கடைகள் உள்ளன, ஆனால், கொரோனா தொற்று காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை
எர்ணாகுளத்தில் 550 கள் கடைகள் உள்ளன, அதில் 50 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன
, கள்ளுக்கடைகள்   தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே  கள் விற்பனை செய்ய வேண்டும்.
5 நபருக்கு மேல் வரிசையில் நிற்க கூடாது.
ஒரு நபருக்கு ஒன்றரை  லிட்டர் மட்டும் கள் விற்பனை செய்ய வேண்டும்.
கள் வாங்க வரும் நபர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்
என பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது.