
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் மெரினா கடற்கரையில் 2 லட்சத்துக்கும் அதிகமாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தின் சிறப்பாக ‘காளையை இளைஞர் அடக்குவது போன்ற மணற்சிற்பம்’ வரைந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போராட்டத்துக்கு வரும் மக்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel