வாஷிங்டன்
உலக அளவில் நேற்று 76834 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு நேற்று மட்டும் கொரோனாவால் 4883 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்று உலக அளவில் 76834 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியபட்டுளனர் ஆரம்பம் முதல் இன்று வரை மொத்தம் 9,35,189 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 1,93,989 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனாவால் 4883 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை கொரோனா 47,192 பேரைப் பலி வாங்கியுள்ளது.
நேற்று அமெரிக்காவில் 26,473 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 2,15,003 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலக அளவில் இது மிகவும் அதிகமான எண்ணிக்கையாகும். நேற்று 727 பேர் மரணம் அடைந்து 5102 பேர் மொத்தம் உயிர் இழந்துள்ளனர்.
இத்தாலியில் பாதிக்கப்போட்டோர் எண்ணிக்கையில் 4782 பேர் அதிகமாகி மொத்தம் 1,10,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் இரண்டாம் இடமாகும். நேற்று 727 பேர் மரணம் அடைந்து மொத்தம் 13,165 பேர் பலி ஆகி உள்ளனர். இது உலக அளவில் மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.
ஸ்பெயின் நாடு மரணம் அடைந்தோர் எண்ணிக்கையில் இரண்டாவதாக உள்ளது. இங்கு நேற்று 923 பேர் மரணம் அடைந்து 9387 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். நேற்று 8195 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டதால் 1,04,118 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். உலக அளவில் இது மூன்றாம் இடமாகும்.
அடுத்தபடியாக சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவில் நேற்று 601 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 1998 பேர் பாதிக்கபட்டுள்னர். நேற்று 23 பேர் மரணம் அடைந்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆகி உள்ளது. இதுவரை 148 பேர் முழுமையாகக் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் 335 பேரும், கேரளாவில் 265 பேரும், தமிழகத்தில் 234 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.