சென்னை

ன்றைய சட்டப்பேரவை தேர்தலில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பில் மாநில வாரி வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.  இதில் மக்கள் காலை 7 மணி முதல் கொரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றி வாக்களித்தனர்.  மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் வாக்களித்தனர்.  இன்று 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 65.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.    இங்கும் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.  கேரள மாநிலத்தில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பின்படி 70.04% வாக்குகள் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பின்படி 78.13% வாக்குகள் பதிவாகின.  இங்கும் அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் இன்று மூன்று மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.   இத்துடன் அசாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவடைகிறது.  இங்கு 7.11 மணி அறிவிப்பின்படி 82.29% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மொத்தம் 8 கட்டமாக நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இங்கு 7.11 மணி அறிவிப்பின் படி 77.68% வாக்குகள் பதிவாகி உள்ளன.