தமிழகத்தில் நிறைவு பெற்றது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு….!

Must read

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவானது இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்தில் அறிவித்தப்படி இன்று காலை 7 மணிக்கு 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முற்று பெற்றது.

வாக்குச்சாவடிகளில், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படாமல், தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.

வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும், வாக்குச்சாவடியில் வந்து காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

More articles

Latest article