இன்றைய முக்கிய செய்திகள்
💥வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
💥தலாக் விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
💥ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோர், இனி வரும் தேர்தல்களில் இணைய வழி தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது
💥சீனாவைஒட்டிய எல்லைப் பகுதியில், இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
💥பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பிரச்னையில் தங்களைத் தனிமைப்படுத்த இந்தியா முயலுவதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் குற்றம்சாட்டினார்
💥இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.
💥ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி வனத்தில் இரு மாநில போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
💥இணையதளத்தில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருந்து விற்பனையாளர்கள் நவம்பர் 23-இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
💥பழநியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சாக்கடை அள்ளும் வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் ஆப்’ பில் வைரலாக பரவிவருகிறது.
💥கோவை அருகே எட்டிமடை பகுதியில் கேரள மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகளைக் கொட்ட முயன்ற 24 லாரிகளை அப்பகுதியினர் நேற்று சிறைபிடித்தனர்
💥வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 60 பேருக்கு பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது
💥விழுப்புரம் – திருவெண்ணய்நல்லூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்தப் பாதையில் புதிதாக இரண்டாவது அகலப்பாதைப் பணி முடிக்கப்பட்டுள்ளது.
💥தென்காசி அருகே 3 பேர் பலி: மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு: மூலிகை மருந்துகளை சென்னைக்கு அனுப்பினர்
💥மதுரை விகாசா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் அங்கத் நாயர் சுதர்சன், சர்வதேச கேம்பிரிட்ஜ் பல்கலை (ஐ.ஜி.சி.எஸ்.இ.,) தேர்வில் முதலிடம் பெற்றார்.மாணவர்கள் அறிவு மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் 40 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் 2015-16 ஆண்டு தேர்வில் பங்கேற்றனர்.
💥பஞ்சாபில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப், காங்., தலைவர் அமரீந்தர் சிங்கும், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், காரசாரமாக கருத்துக்களை பகிர்ந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
💥ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
💥பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து (ஆர்ஜேடி) இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜ் வல்லப யாதவை மீண்டும் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது
💥இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
💥ஆந்திராவில் நீர்விளையாட்டு அகாமி தொடங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
💥ஊழல் புகார் எதிரொலியைத் தொடர்ந்து, சங்கத்தின் கணக்கு விவரங்களை தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக வெளியிட்டுள்ளது.
💥பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்துள்ளனர்.
💥பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் ₹75 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கினார்