வரலாற்றில் இன்று 02.11.2016

Must read

வரலாற்றில் இன்று 02.11.2016
நிகழ்வுகள்
1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
1889 – வடக்கு, தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக  இணைந்தன.
1914 – ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.
1930 – ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.
1936 – இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.
1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1963 – தெற்கு வியட்நாம் அதிபர் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
2007 – இலங்கை தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத் தலைவர் (இ. 1849)
1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).
1965 – ஷாருக்கான், இந்தி நடிகர்
இறப்புகள்
1903 – பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).
1950 – ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856).
1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)
சிறப்பு நாள்
மொரீசியஸ் – இந்தியர்கள் வருகை நாள் (1834)
கல்லறை திருநாள்

More articles

Latest article