3 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை வந்துள்ளார் ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் முதற்கட்டமாக அவர் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்துப் பேசினார் நாளை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளார்.
bankemoon
மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயரத்தப்படும் – தமிழக முதல்வர் ஜெயலலிதா.
சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேருக்கு ஜிகா வைரஸ் அறிகுறி  உறுதி செய்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
தமிழகத்தில் ஓராண்டில் ரூ.25,020 கோடி முதலீடா வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா ? – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.
குன்றத்தூரைச் சேரந்த மருத்துவ மாணவர்கள் கவுதம் சுதர்சன், ஆசிஸ்பால் இருவரும் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய விவகாரம் : இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க எம்ஜிஆர் மருத்துவ பல்லைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்.
ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி தொடக்கம் டிசம்பர் வரை அழைப்புகள் இலவசம் உலகிலேயே குறைந்த இணைய கட்டணம் – ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு.
தமது கையெழுத்தைப்போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்றும், அதனை நம்ப வேண்டாம் – பிரதமர் நரேந்திர மோடி.
முடங்கியுள்ள கட்டுமானப் பணிகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டப் பணிகளை முடுக்கி விடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளத்தில் பட்டா மாறுதலுக்காக குமார் என்பவரிடம் 1500 லஞ்சம் வாங்கிய விஏஓ சத்யா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற இன்று முதல் கணக்கெடுப்பு தொடங்கப்படும் – புதுவை முதல்வர் நாராயணசாமி.
நக்கீரன் மீது அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
அம்மா ஆரோக்கியத் திட்டம் 3 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
போக்குவரத்து கழகத்தில் 1600 பணியிடங்களில் ஓய்வுபொற்றோர் வாரிசுகளுக்கு கருணையடிப்படையில் பணி வழங்கப்படும்
சென்னைக்கு கூடுதலாக  100 சிற்றுந்துகள்