சென்னை
தமிழகத்தில் இன்றைய (29/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 2,279 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,81,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,684 பேர் உயிர் இழந்து 8,55,085 பேர் குணம் அடைந்து தற்போது 13983 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,47,148 பேர் பாதிக்கப்பட்டு 4,232 பேர் உயிர் இழந்து 2,37,375 பேர் குணம் அடைந்து தற்போது 5,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 58,471 பேர் பாதிக்கப்பட்டு 691 பேர் உயிர் இழந்து 56,490 பேர் குணம் அடைந்து தற்போது 1,290 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 55,796 பேர் பாதிக்கப்பட்டு 813 பேர் உயிர் இழந்து 53,568 பேர் குணம் அடைந்து தற்போது 1,415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.