அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது: எச்.ராஜா

Must read

காரைக்குடி:
திமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜகவின் துணை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுகவின் ஆ.ராசா முதல்வரை மட்டும் காயப்படுத்தவில்லை. பெண்ணினத்தையே காயப்படுத்தியுள்ளார். யாரை வேண்டுமென்றாலும் இழிவுப்படுத்தலாம் என்பது அவரது வழக்கம். அரசியல், கருத்தியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் தயராக இருக்கிறோம்.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்த விஷயமும் திமுகவிடம் இல்லை. அதனால் தனிநபர் மீதான தாக்குதலில் இறங்கியுள்ளனர். இது வண்மையாகக் கண்டிக்கதக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேசிய அவர், அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

More articles

Latest article