சென்னை

மிழகத்தில்  இன்றைய (12/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 30,355 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,68,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 16,471 பேர் உயிர் இழந்து 12,79,658 பேர் குணம் அடைந்து தற்போது 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,12,505 பேர் பாதிக்கப்பட்டு 5,458 பேர் உயிர் இழந்து 3,66,434 பேர் குணம் அடைந்து தற்போது 40,613 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,04,812 பேர் பாதிக்கப்பட்டு 1,119 பேர் உயிர் இழந்து 90,403 பேர் குணம் அடைந்து தற்போது 13,290 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,03,184 பேர் பாதிக்கப்பட்டு 811 பேர் உயிர் இழந்து 87,195 பேர் குணம் அடைந்து தற்போது 15,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.