சென்னை

மிழகத்தில்  இன்றைய (09/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5,441 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,20,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,863 பேர் உயிர் இழந்து 8,74,305 பேர் குணம் அடைந்து தற்போது 33,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,61,072 பேர் பாதிக்கப்பட்டு 4,302 பேர் உயிர் இழந்து 2,43,909 பேர் குணம் அடைந்து தற்போது 12,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 62,070 பேர் பாதிக்கப்பட்டு 699 பேர் உயிர் இழந்து 57,982 பேர் குணம் அடைந்து தற்போது 3,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 59,513 பேர் பாதிக்கப்பட்டு 839 பேர் உயிர் இழந்து 55,591 பேர் குணம் அடைந்து தற்போது 3,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.