சென்னை

மிழகத்தில்  இன்றைய (06/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,07,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,804 பேர் உயிர் இழந்து 8,68,722 பேர் குணம் அடைந்து தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டு 4,280 பேர் உயிர் இழந்து 2,42,324 பேர் குணம் அடைந்து தற்போது 9,755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 60,824 பேர் பாதிக்கப்பட்டு 695 பேர் உயிர் இழந்து 57,549 பேர் குணம் அடைந்து தற்போது 2,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 58,226 பேர் பாதிக்கப்பட்டு 833 பேர் உயிர் இழந்து 54,915 பேர் குணம் அடைந்து தற்போது 2,481 பேர் சிகிச்சையில் உள்ளனர்.