சென்னை

மிழகத்தில்  இன்றைய (05/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,672 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,03,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,789 பேர் உயிர் இழந்து 8,66,913 பேர் குணம் அடைந்து தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,55,074 பேர் பாதிக்கப்பட்டு 4,275 பேர் உயிர் இழந்து 2,41,808 பேர் குணம் அடைந்து தற்போது 8,991 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 60,534 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 57,404 பேர் குணம் அடைந்து தற்போது 2,436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 57,859 பேர் பாதிக்கப்பட்டு 828 பேர் உயிர் இழந்து 54,709 பேர் குணம் அடைந்து தற்போது 2,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

[youtube-feed feed=1]