• விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 13,400 கர்நாடகாவில் 20,378 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 20,378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,87,827 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. 

இன்று 381 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,479 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,053 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,17,117 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,42,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 13,400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,85,142 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 94 பேர் உயிர் இழந்து இதுவரை 10,832 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 21,133 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,08,515 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,65,795 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.