சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை உள்பட அண்டை மாவட்டங்களும் கொரோனா தொற்றால் கடுமையாகபாதிக்கப் பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதுடன் மொத்த எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து திருவள்ளூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 380ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரியலூரிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 5ந்தேதி நிலவரப்படி 34ஆக இருந்தது. ஆனால், கடந்த 6 ந்தேதி கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் மூலம் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தறபோதைய நிலையில், மொத்தம் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
இந்த நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 48 பேர் குணமடைந்துள்ளனர்.