திருச்செந்தூர்

ன்று முதல் 700 கும்பங்களில் திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவின் யாக பூஜை தொடங்குகிறது.

வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 27-ந்தேதி கணபதி பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்குகிறது. இன்று காலையில் மூலவர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு தானிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, திருக்குட வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கிறது. மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோவில் உள்பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜை தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை, குமரவிடங்கபெருமான், ஆத்மநாதர் பஞ்சலிங்கம், நடராஜர் உள்ளிட்ட கும்பங்களுக்கு வாசனை திரவியங்களைக் கொண்டு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு, காசி, ராமேஸ்வரம், காவிரி, தாமிரபரணி, திருச்செந்தூர் கடல், நாழிக்கிணறு உள்ளிட்ட தீர்த்தம் சேகரித்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும். .