சென்னை

ன்று சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்க தேசம் அணிகள் மோதுகின்றன.

இன்று -வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்க தேசம் அணிகள் மோதுகின்றன. இது நடப்பு தொடரில் சென்னையில் நடைபெறும் 2-வது போட்டி ஆகும்.

ஏற்கனவே நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்ததால் தொடர்ந்து 2 வெற்றியை ருசித்துள்ள அந்த அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்குக் குறி வைத்துள்ளது.

நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பவுல்ட்டும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஐ.பி.எல். போட்டியின் தொடக்க நாளில் பீல்டிங் செய்த போது கால்முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து முழு உடல் தகுதியை எட்டி இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறார். இதனை அவரே நேற்று உறுதிப்படுத்தினார். 7 மாதங்களுக்குப் பிறகு அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து:

டிவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன் அல்லது சோதி, டிரென்ட் பவுல்ட்.

வங்கதேசம்:

லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹிரிடாய், மெஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் அல்லது நசும் அகமது.