விக்கிரவாண்டி

ன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேத் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி \ உடல் நலக்குறைவால் \ மரணம் அடைந்தார். இதையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி இன்று நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

மொத்தம் 64 பேர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.