டில்லி

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கடந்த 6 ஆம் தேதி  இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது வழக்கறிஞர்கள்

”இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் ரிட் மனு நவம்பர் 10 ஆம்  தேதி  தற்காலிகமாகப் பட்டியலிடப்பட்டு உள்ளதை நீக்கக்கூடாது. மேலும் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குத் துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் ஆளுநரின் அறிவிப்புகுத் தடை கோரிய ரிட் மனுவை இணைத்து விசாரிக்க வேண்டும்”

என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று தமிழக ஆளுநருக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களைத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இன்று பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.