டில்லி

டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். தற்போது 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டிசம்பர் 4-ந்தேதி தொடங்கி\ டிசம்பர் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.