சபரிமலை

இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி இவர் காணிக்கையாக வழங்கியதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள் ஆகும். .

சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்குச் சபரிமலை நடை  திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து நாளை 11-ஆம் தேதி அபிஷேகம் முடிந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

பிறகு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மண்டல, மகர விளக்கு பருவம் தொடங்க உள்ள நிலையில் 41 நாட்கள் மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.