தமிழக ஆளுநர் – உள்துறை அமைச்சர் சந்திப்பு

Must read

டில்லி

ன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி பதவியை வகித்து வந்த வி பி சிங் பட்னோர் பதவிக் காலம் கடந்த 20 ஆம் தேதி முடிவடைந்தது.  இதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோகித் இந்த இரு பதவிகளையும் கூடுதலாக நிர்வகிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.  இன்னும் சில மாதங்களில் இவரது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் இவருக்குப் பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் நிர்வாகி ஆகிய கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.  புரோகித் அசாம் மாநில ஆளுநராக ஏற்கனவே பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் இன்று டில்லியில் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சந்திப்பு நடந்துள்ளது. இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

More articles

Latest article