ண்டன்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே ஆன 4 ஆம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 157 ரன் வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம் நடந்து வந்தது.  இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 191 ரன்களும், இங்கி லாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி,  466 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 127 ரன்களும் புஜாரா 61 ரன்களும் ஷர்துல் தாகூர் 60 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர்.  பின்னர் 2 வது இன் னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட்
இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. ஹசீப் ஹமீத் 43 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 31
ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம்  தொடங்கியது. அரைசதம் அடித்த நிலையில் பர்ன்ஸ்
விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அடுத்த வந்த மலான் ரன் அவுட் ஆக, பின்னர்
கேப்டன் ஜோ ரூட் வந்தார். இதற்கிடையே சிறப்பாக ஆடி வந்த ஹசீப் ஹமீத்தை (63 ரன்),
ஜடேஜா போல்டாக்கினார்.

அடுத்ததாக வந்த ஒலி போப் மற்றும் பேர்ஸ்டோ  விக்கெட்டுகளை அடுத்தடுத்து பும்ரா
வீழ்த்த, மொயில் அலி விக்கெட்டை ஜடேஜா தூக்கினார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸும் கிரேக் ஓவர்டோனும் சிறிது நிதானமாக ஆடினர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்திய உமேஷ் யாதவ், அடுத்து ஆண்டர்சன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இன்றைய வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.