சென்னை
தமிழகத்துக்கு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார்
ஏற்கனவே தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இன்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார்.
முதல்வருடன், அதிகாரிகள் குழுவும் அமெரிக்கா செல்கிறது. இப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி தனது 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.