சென்னை

இன்று தமிழக சட்டசபையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது  தமிழக. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு, 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.எனக் கூறப்படுகிறது.