
சென்னை :
இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினர்.
இன்று காலை 10மணி அளவில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவுரப்படுத்தினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்ககி சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel