சென்னை

ன்று இரவு திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் கோடை விடுமுறை என்பதால் வெளி ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே,

“திருச்சியில் இருந்து இன்றிரவு 11 மணியளவில் புறப்படும் மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை காலை 6.05 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது. முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.