நீலகிரி
இன்று நீலகிரி வர்த்தகர்கள் இ பாஸ் நடைமுறையை எதிர்த்து கடைடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வமலைகளின் அரசியான ஊட்டிக்கு ரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும். \எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது இந்த கட்டுப்பாட்டின்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்கிறார்கள். இதன் பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள்.
கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து அனுமதிக்கிறார்கள். இதற்கு கூடுதல் ஊழியர்கள் இல்லாததால், இ-பாஸ் சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டு சோதனை நடைமுறைகள் முடிவதற்கு தாமதமாகியதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் ஏ.ஜே.தாமஸ், மாநில இணை செயலாளர் அப்துல் ரசாக், மாவட்ட கூடுதல் செயலாளர் பாதுஷா ஆகியோர் செய்தியாளர்களிடம்,
”நீலகிரி மாவட்டத்துக்கு வாகனங்களில் வர இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகிறது. அதோடு ஆட்டோ, ஜீப், கார், வேன் உள்பட சுற்றுலா வாகனங்கள் ஓடாது. இதனால் நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிராக 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இதேபோல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். ”
எனக் கூறி உள்ளனர்.