சென்னை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. ,தனது கூட்டணிக் கட்சிகளில்  ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்று மதியம் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.

இதைத்  தொடர்ந்து  இன்று மாலையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.