டில்லி

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கண்புரையால் துயரடைந்து வந்தார்.  இதையொட்டி அவருக்கு ஒரு கண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது.  தற்போது அந்தக் கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

இன்று காலை அவருக்கு மற்றொரு கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை நடந்துள்ளது.   இந்த அறுவை சிகிச்சையும் ராணுவ மருத்துவமனையில் நடந்துள்ளது.  இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்தார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார்.   அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளார்.