விழுப்புரம்

ன்று விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் சூழலில், தி.மு.க. வேட்பாளராக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. செயலாளர்கள் உடன் இருந்தனர்.

இன்று பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை மெயின்ரோடு வழியாக தாலுகா அலுவலகம் வந்து தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.