திருச்சி
இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணையத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

நேற்று தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செயப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து பின்னர் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடி தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். விடுதியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இண்று காலை 11 மணிக்கு கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி,
பிரதமர் தாம் செல்லும் வழியில் கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பிறகு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்று அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்
பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்ட பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
இதன் பின்னர் அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. பிரதமர் மோடி, பின்னர் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் நேரடியாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.