வாரணாசி

வாரணாசியில் ரூ.339 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது வழக்கமாகும். நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, மோசமான சுற்றுப்புறங்களைக் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  இதை மாற்ற எண்ணிய பிரதமரின் சிந்தனையில் உதித்ததுதான் காசி விஸ்வநாதர் அலய வளாக திட்டம். இப்போது  ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையைப் பக்தர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கும் பிரதமரின் தொலைநோக்கு செயல்வடிவம் பெற்றுள்ளது.

கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டுத் திட்டப் பணிகள் தொடங்கின.  பிரதமர் மோடி இத்திட்டத்தின் அனைத்து மட்டத்திலும்  தீவிர ஆர்வம் காட்டி அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கி வந்தார். மாற்றுத்திறனாளிகளும், எளிதில் வந்து செல்லும் வகையில் சாய் தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றியிருந்த 300-கையகப்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றுக்கு இடையிலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.  இன்று பகல் 1 மணி அளவில் இந்த கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி வழிபாடு செய்து பிறகு வளாகத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.