மும்பை

ன்று பிரதமர் மோடி தானே மற்றும் திவா இடையே கூடுதல் ரயில் பாதைகளை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

 

இன்று மாலை 4.30 மணிக்கு தானே மற்றும் திவாவை இணைக்கும் இரண்டு கூடுதல்  ரயில் பாதைகளைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.  இந்த மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில்களையும் கொடியசைத்து அனுப்புவதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்

கல்யாண் ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு நாட்டின்  வடக்குப் பக்கத்திலிருந்தும், தெற்கு பக்கத்திலிருந்தும் வரும் போக்குவரத்து கல்யாணில் சந்தித்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திற்கு (சிஎஸ்எம்டி)  செல்கிறது.  இந்த நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் மெதுவாகச் செல்லும் உள்ளூர் ரயில்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தவிர மேலும் இரண்டு பாதைகள் உள்ளூர் விரைவு, மெயில் விரைவுவண்டி, சரக்கு ரயில்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.  புறநகர் மற்றும் தொலைதூர ரயில்களைப் பிரிப்பதற்குக் கூடுதலாக இரண்டு பாதைகளுக்குத் திட்டமிடப்பட்டது.  இந்த தானே மற்றும் திவாவை இணைக்கும் இரண்டு கூடுதல் ரயில் பாதைகள் சுமார் ரூ.620 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சிறப்பு அம்சங்களாக 1.4 கிமீ தூர ரயில் மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்கள் உள்ளன. மும்பையில் இந்தப் பாதைகள், புறநகர் ரயில் போக்குவரத்துடன் தொலைதூர ரயில் போக்குவரத்தின் குறுக்கீடுகளைக் குறிப்பிடத்தக்க  அளவு நீக்கும். இந்நகரில் இந்தப் பாதைகள்  36 புதிய புறநகர் ரயில்களின் அறிமுகத்திற்கும் உதவும்.