சென்னை

ன்று சென்னையில் ஆப்ரணத் தங்கம்  விலை கிராமுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

Indian Traditional Gold Necklace shot in studio light.

தங்கம் விலை, கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து அதே மாதம் 22 ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதையொட்டி விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

நகை பிரியர்கள் இதானல் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மக்ழ்ச்சொ சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு மேலும் விலை அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.